பிரம்மாண்ட சண்டைக் காட்சிகளுடன் உருவாகியுள்ள சலார்

பிரம்மாண்ட சண்டைக் காட்சிகளுடன் உருவாகியுள்ள சலார்

கே.ஜி.எப். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவுள்ளது. அண்மையில் இயக்குநர் பிரசாந்த் நீல் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் டீசர் கடந்த ஜூலை 6-ம் தேதி அதிகாலை வெளியானது. சலாருக்கும் கேஜிஎப்க்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது. 

பிரம்மாண்ட சண்டைக் காட்சிகளுடன் உருவாகியுள்ள சலார்

இந்நிலையில், சலார் திரைப்படத்தின் சண்டைக் காட்சியில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு சமமாக லாரிகள் என 750 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share this story