என்னை அறிந்தால் பட ஹிந்தி ரீமேக்கில் சல்மான்கான்

என்னை அறிந்தால் பட ஹிந்தி ரீமேக்கில் சல்மான்கான் 

என்னை அறிந்தால் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2015 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி, திரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். அருண் விஜய்,  அனிகா, பார்வதி நாயர், விவேக், உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்தது என்றே கூறலாம். அதற்கு காரணம் என்னவென்றால், இயக்குனர் கெளதம் மேனனும் நடிகர் அஜித்தும் கூட்டணியாக இணைந்தது தான். அது மட்டுமில்லாமல் படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.

என்னை அறிந்தால் பட ஹிந்தி ரீமேக்கில் சல்மான்கான் 

இந்நிலையில், இத்திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியிலும், கவுதம் மேனனே படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வக தகவல் வெலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story