சல்மான் கான் நடித்த `சிக்கந்தர்' படத்தின் ஓடிடி ரிலீஸ்..!

sikkindhar

சல்மான் கான் நடித்த `சிக்கந்தர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து ’சிக்கந்தர்’ படத்தை இயக்கினார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய
கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த மார்ச் 30-ந்தேதி உலக அளவில் வெளியானது.salman

இதனை தொடர்ந்து, திரையரங்கில் வெளியான 'சிக்கந்தர்’ படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லாதது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்தது. திரைப்படம் மக்களிடமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
திரைப்படம் இன்று நள்ளிரவு முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Share this story