எழுந்து நிற்க கஷ்டப்படும் சல்மான் கான்: கவலையில் ரசிகர்கள்

Salman khan

பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழந்து வருபவர் சல்மான் கான். இளம் வயதில் உச்ச நட்சத்திரமாக விளங்கினார். தற்போது அவருக்கு 58 வயது ஆனாலும் துடிப்புடன் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சமீபத்தில் ஒரு விழாவிற்கு சென்றிருந்தார். அப்போது ஷோபாவில் அமர்ந்திருந்தார். பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே வந்தபோது, அவரிடம் பேசுவதற்காக சல்மான் எழுந்து நிற்க முயற்சி செய்வார்.


அப்போது அவரால் உடனடியாக எழுந்து நிற்க முடியவில்லை. மெதுவாக உடல்நலம் குன்றிய நபர் எழுந்து நிற்பதுபோல் எழுந்து நிற்பார். பின்னர் சோனாலி பிந்த்ராவை தழுவி வாழ்த்து தெரிவிப்பார். இதுபோன்று மற்றொரு வீடியோவிலும் எழுந்து நிற்க கஷ்டப்படுவார். இதுபோன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சல்மான் கான் மெதுவாக எழுந்து நிற்பதை கண்ட ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எங்களுடைய சிறுவயது பிடித்தமான நடிகர் தற்போது வயதாகிவிட்டார். நாமும் அப்படித்தான் என ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். லெஜெண்ட் வயதாகிவிட்டார் என மற்றொரு ரசிகர் கருத்து பதிவிட்டுள்ளார்.மற்றொரு ரசிகர் "எனக்கு பிடித்தமான ரசிகரை வயதானவராக பார்க்கும்போது கவலை அளிக்கிறது" எனத் தெரிவித்தள்ளார்.சல்மான் கானின் முதல் படமான மைன் பியார் கியா (Maine Pyaar Kiya) கடந்த 23-ந்தேதி ரீ-ரிலீஸ் அனது. வரிசையாக இரண்டு மூன்று படங்களில் நடிக்க இருக்கிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிகந்தர் உள்ளிட்ட படங்களில் நடத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கிடையே சல்மான் கான் விலா ஏலும்பு (Rib Injury) காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறது. அதில் இருந்து அவர் விரைவில் குணம் அடைந்து வர வேண்டும் எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this story