“சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” - சல்மான் கான் எச்சரிக்கை
பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சல்மான் கான், தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார். சஜித் நதியாத்வாலா தயாரிப்பில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே சல்மான் கான், அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக சமீபத்தில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த விளம்பரங்கள் பொய்யானது என தெரிவித்துள்ளார் சல்மான் கான். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “சல்மான் கான், எந்த நிறுவனங்களுடனும் இணைந்து அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்தவில்லை.
இந்த நிகழ்ச்சி சம்பந்தமாக எந்த விளம்பரங்களும் மின்னஞ்சல்களும், செய்திகளும் வெளியானால் அதை நம்ப வேண்டாம். சல்மான் கான் பெயரில் மோசடியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.