நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்து வரும் சல்மான்கான்-என்ன படம் தெரியுமா ?
1792978224000
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர், சல்மான்கான். பல வருடங்களாக தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அவர், அடிக்கடி சர்ச்சைக்குரிய செயல்களின் மூலமாகவும், கருத்துகளின் மூலமாகவும் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த ‘சிக்கந்தர்’ படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், ‘வாரிசு’ வம்சி பைடிபள்ளி இயக்கும் ‘மான்ஸ்டர்’ என்ற படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்து வரும் சல்மான்கான், தனக்கு 60 வயதாகியும் கூட திருமணம் செய்துகொள்ளவில்லை. 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் வைத்திருக்கும் அவர், சில ஹீரோயின்களை காதலித்து தோல்வி அடைந்தார். நடிகை சங்கீதா பிஜ்லானியுடன் திருமணம் வரை சென்று, கடைசியில் அது நிறுத்தப்பட்டது.

