தொடர்ந்து தெலுங்கு படங்களுக்கு இசையமைக்கும் சாம் சி எஸ்...!
1741853469832

புஷ்பா 2 படத்தை தொடர்ந்து மற்றோரு படத்திற்கு இசையமப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் சாம் சி எஸ். 'கைதி, விக்ரம் வேதா' படங்களின் வெற்றிக்குப் பிறகு அவருக்கான ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தவர்.
கடந்த வருடம் தெலுங்கில் வெளிவந்த 'புஷ்பா 2' படத்திற்கும் பின்னணி இசையமைத்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனிடையே, அப்படத்தை அடுத்து 'பொம்மரிலு' பாஸ்கர் இயக்கத்தில் சித்து ஜொன்னலகட்டா நடிக்கும் 'ஜாக்' என்ற தெலுங்குப் படத்தில் இசையமைக்க உள்ளார் சாம் சி எஸ் .