"Dreams On" – சிகிச்சைக்கு முன்னதாக ஊர் சுற்றும் சாம்.

photo

தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஹிட் நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம்வருபவர் சமந்தா. மையோசிடியஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு  நீண்ட நாட்களாக அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். அதே சமயம் படங்களிலும் நடித்து வந்தார். தற்போது சமந்தா, கமிட்டான படங்கள் அனைத்தையும் நடித்து முடித்துவிட்டு சினிமாவிற்கு ஒரு வருடம் இடைவேளை விட்டுவிட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொள்ளப்போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சமந்தா இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு ஜாலியாக சுற்றுலா சென்றுள்ளார்.

photo

அது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் அணிந்துள்ள தொப்பியில் Dreams On என எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பாலி தீவில் காலை பொழுதின் ரம்மியத்தை ரசித்தபடி அந்த அழகை நமக்காக காட்டியுள்ளார் சமந்தா. சமந்தாவின் இந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் ஹார்டின்களை பறக்க விட்டு வருகின்றனர். தொடர்ந்து சிகிச்சைக்கு முன் மன அமைதிக்காக இப்படி ஜாலியாக சென்றுள்ளார் என்றும், விரைவில் குணமடைய வாழ்த்துகள எனவும் பதிவிட்டுள்ளனர்.

Share this story