"காதலனுக்கு கல்யாணம் ஆயிடுச்சி" -அடுத்து சமந்தா சமர்த்தா என்ன செஞ்சார் தெரியுமா ?

samantha

நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை கல்யாணம் செய்து கொண்டதும் ,சமந்தா தனது நிச்சயதார்த்த மோதிரத்தையும், திருமண ஆடையையும் ,டாட்டூவையும் மாற்றி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமந்தா நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து கல்யாணமே செய்து கொண்டார் .பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ,இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர் .இந்நிலையில் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார் .
இந்நிலையில் சமந்தா வெப்தொடர் இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ராஜ் நிடிமோரு ஏற்கனவே திருமணமானவர். ஆனால், சமந்தாவுடன் தன்னை இணைத்து வெளியாகும் செய்திகளை இதுவரை அவர் மறுக்கவில்லை. சமந்தாவும் மறுப்பு தெரிவித்து பதிவிடவில்லை.
தெலுங்கில் 2010ல் நாக சைதன்யாவும், சமந்தாவும் ஜோடி சேர்ந்து நடித்த படம், ‘யே மாய சேசாவே’. அப்போது இருவரும் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்ததை நினைவுகூறுகின்ற வகையில், அந்த படத்தின் எழுத்த்துக்களை சுருக்கி ymc என்று தன்னுடைய உடலில் டாட்டூவாக குத்தியிருந்தார் .ஆனால் தன் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கு திருமணம் ஆனதும் அந்த டாட்டூவை அழித்து விட்டார் .

Share this story