"நாம் இன்னும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’-பொங்கியெழுந்த சமந்தா

samantha

இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதல் திருமணம் செய்துகொண்ட சமந்தா, தற்போது தனது முதல் குழந்தையை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறார். இந்நிலையில், நல்லமுறையில் குழந்தையை பெற்றெடுப்பதற்காக சத்தான உணவு, தேவையான உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார். நாள்தோறும் தனது சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவர், அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள், பெண்களுக்கு எதிரான நிகழ்வுகளுக்கு கருத்து தெரிவித்து வருகிறார்.

 அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், பதிவு ஒன்றை ரீ-ஷேர் செய்துள்ளார். அதில், ‘நாம் எப்படிப்பட்ட உலகத்தில் வாழ்கிறோம் என்றால், விலைமாதுக்களை விமர்சிக்கும் இச்சமூகம், அவர்களிடம் செல்பவர்களை பற்றி பேசுவது இல்லை. தனிமையான தாயை விமர்சிப்பவர்கள், விட்டுவிட்டு சென்ற தந்தையை விமர்சிப்பது இல்லை. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி பேசுபவர்கள், அந்த கொடுமையை செய்தவர்கள் பற்றி பேசுவது இல்லை. உண்மையை மட்டும் பேசுபவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். நாம் இன்னும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

Share this story