1980களின் பின்னணியில் அதிரடி பெண்ணாக நடித்துள்ள சமந்தா -எந்த படம் தெரியுமா ?

samantha

கடந்த ஆண்டு சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான தெலுங்கு படம், ‘சுபம்’. இதில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இது அவரது ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பில் தயாராகி திரைக்கு வந்த முதல் படமாகும். இதை தொடர்ந்து, ‘மா இன்டி பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தை சமந்தா தயாரித்து ஹீரோயினாக நடித்துள்ளார். பி.வி.நந்தினி ரெட்டி எழுதி இயக்கியுள்ள இதில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

கடந்த 1980களின் பின்னணியில் அழுத்தமான குடும்ப சென்டிமெண்ட் மற்றும் அதிரடி ஆக்‌ஷனை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் சமந்தா முதலில் அமைதியான மருமகளாகவும், பிறகு சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் அதிரடி பெண்ணாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்ட காட்சி மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளால் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Share this story