இரண்டாவது திருமணம் குறித்த கேள்விக்கு ‘சமந்தா’ கொடுத்த தடாலடி பதில்…

photo

முன்னணி நடிகையான சமந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு புள்ளி விவரத்துடம் பதில் கொடுத்துள்ளார் சாம்.

photo

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து அசத்தி வரும் சாமந்தா , மயோசிடிஸ் எனும் தசை அலர்ஜி நோயால் கடுமையாக அவதிப்பட்டு அதற்காக தொடர் சிகிச்சையில் உள்ளார். இதற்கு முன்னர் அவரது கணவர் நாகசைதன்யா உடனான விவாகரத்து அவரை மிகவும் வாட்டியது. ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு வெக்கேஷன், ஆன்மீகம் என தன்னை மாற்றியுள்ள சாம் தொடந்து சமூகவலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ரசிகர்கள் அதற்கு கமெண்ட்டுகளை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

photo

இந்த நிலையில் சமந்தாவிடம் அவரது ரசிகர் ஒருவர் சமூகவலைதளம் வாயிலாக மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் கொடுத்த சாம் சில புள்ளி விவரங்களின் படி 2023ஐ பொறுத்தவரை முதல் திருமண விவாகரத்து 50% உள்ளது. அதேசமயம் இரண்டாவது மற்றும் மூன்றாவது திருமண விவகாரத்து முறையே 67%, 73%ஆக  உள்ளதாக  சாம் பதிலளித்துள்ளார். இதன் மூலமாக மறுமணத்துக்கு நோ சொல்லியுள்ளார் சமந்தா.

Share this story