பாடகி சின்மயி வீட்டிற்கு வந்த சமந்தா.. அடிப்பாவி என புலம்பிய கணவர்..!
பாடகி சின்மயி வீட்டிற்கு நடிகை சமந்தா வந்த நிலையில், அவrஐ பார்த்து சின்மயி கணவர் அடிப்பாவி என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, ’ஜிக்ரா’ என்ற படத்தின் புரமோஷனில் கலந்து கொள்ள ஹைதராபாத் வந்தார். இந்த நிலையில், அவர் சின்மயி வீட்டிற்கும் வந்த நிலையில், அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொலுவை பார்த்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Aiyoo Soo Cute 🥰 Thalavii Samantha and Papa
— Michael 🐐 (@Itz_MichaelVj) October 9, 2024
Sam also papa tha@Samanthaprabhu2#Samantha #SamanthaRuthPrabhu #SamanthaRuthPrabhu𓃵 pic.twitter.com/kPGYBqdvlZ
இந்த நிலையில், சின்மயி குழந்தையை எடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த சமந்தா, திடீரென "அப்பா அம்மாவுக்கு டாட்டா சொல், நாம் கிளம்புவோம்" எனச் சொன்னார். அந்த குழந்தையும் உடனே "டாட்டா" கூறியது. இதை பார்த்த சின்மயியின் கணவர் அடிப்பாவி, ’4,5 நொடிகளில் எங்களை மறந்து விட்டாயே" என்று கூறும் காட்சி, அந்த வீடியோவில் உள்ளது. இதுதான் சித்தியின் காதல் என்று, இன்ஸ்டாகிராமில் சமந்தா பதிவு செய்துள்ள நிலையில், இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.