ஹாலிவுட் நடிகர் மேத்யூ மறைவுக்கு சமந்தா இரங்கல்
1698650586280
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மேத்யூ பெர்ரி வசித்து வந்தார். அவர் பிரண்ட்ஸ் தொடர் மூலமாக பிரபலமானவர். அவர் அதிகாலை 4 மணி அளவில் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதிகாலை வீட்டிற்கு வந்த அவர் அவரது உதவியாளரை முக்கிய வேலையாக வெளியில் அனுப்பியுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது மேத்யூ நீச்சல் குளத்தில் மிதப்பதை கண்டு அதிர்ந்து அவசர என்ணிற்கு அழைத்துள்ளார். அவர்கள் மேத்யூ இறந்த தகவலை உறுதி செய்தனர்.
மேத்யூவுக்கு நீச்சல் குளத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் மேத்யூ ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில் நடிகை சமந்தா மேத்யூ மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.