குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ள சமந்தா
1701096023500

சரும அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா அதன் சிகிச்சைக்காக படங்களில் நடிக்காமல் வெளிநாடுகளுக்கு சிகிச்சை மற்றும் வெக்கேஷன் சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வந்தார். தற்போது சாம் மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அதிலும் அவரது கவனம் ஹாலிவுட் பக்கம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக சம்ந்தா ‘சென்னை ஸ்டோரி’ எனும் ஹாலிவுட் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும், படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகை சமந்தா 2 குழந்தைகளை தத்தெடுக்க உள்ளதாக, அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். நாக சைதன்யாவுடன் சேர்ந்து வாழுமாறு உறவினர்கள் கூறிய யோசனையை மறுத்த சமந்தா குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.