செல்ஃப் மோட்டிவேஷன் செய்த 'சமந்தா' – உருகும் ரசிகர்கள்.

photo

முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவிற்கு என எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். நடிகை சமந்தா தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் தனது காதல் கணவரை விவாகரத்து செய்து பின்னர் நடிப்பின் மீது அதிக கவனத்தை செலுத்தினார். பிசியாக நடித்து வந்த சமந்தா அரிய வகை மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

photo

இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் தனது வாழ்வில் நடந்த சில சம்பவங்களின் புகைப்படங்களை பகிர்ந்து பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார் சாம் . அதில் "ஆழ்ந்த மூச்சு விடு பாப்பா. விரைவில் சரியாகிவிடும் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்த 7-8 மாதங்களில் நீ மிகவும் மோசமான நாட்களைப் பார்த்துவிட்டாய், அவற்றை எல்லாம் கடந்துவிட்டாய். அதை மறக்கவே கூடாது.நீ அவற்றை எவ்வாறு கடந்து வந்தாய் என்பதை நினைவில் வைத்துக் கொள். யோசிப்பதை நிறுத்தி, கவனத்தை சிதறடித்து, ஒரு அடியை மற்றொன்றுக்கு முன்னால் வைத்து நடந்தாய். வேலை முடிந்தது. நீ அதை எப்படி செய்தாய் என்பது நம்பமுடியாதது. நீ அதை எப்படி தொடர்ந்து செய்தாய் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் உன்னைப் பற்றி நீ பெருமைப்பட வேண்டும். நீ வலிமையானவள்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

photo

photo

இவ்வாரு தனக்குத்தானே ஆறுதல் கூறுவதை போல் நடிகை சமந்தா பகிர்ந்துள்ள இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் சமந்தாவிற்காக உருகி ஆறுதல் கூறி வருகின்றனர்.

photo


 

Share this story