"இப்போது திருப்தியாக உணர்கிறேன்’’-சமந்தா ஏன் இப்படி சொன்னார் தெரியுமா ?

samantha

‘நா இன்டி பங்காரம்’ தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தை அவரது காதல் கணவர் ராஜ் நிடிமொரு தயாரித்துள்ளார். நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் இந்த படம் நாளை வெளியாகியுள்ளது . இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமந்தா கலந்துகொண்டு வருகிறார். பல்வேறு பேட்டிகளும் கொடுத்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் பேசிய அவர், ‘‘முன்பெல்லாம் சினிமா ஒரு ஓட்டப்பந்தயம் என்றும் அதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், போட்டியின் இறுதி வரை சென்று வெற்றியடைய வேண்டும் என்றும், நினைத்துக்கொண்டு இருந்தேன். காலப்போக்கில் தான் அப்படி ஒரு பந்தயமே இல்லை என்றும், நாம் சென்று பிடிக்க வேண்டிய எல்லை கோடு என்பது இல்லை என்றும் உணர்ந்து கொண்டேன். இப்போது திருப்தியாக உணர்கிறேன்’’ என சமந்தா கூறியுள்ளார்.

Share this story