சமந்தாவுக்கு பிடித்த ஸ்வீட் என்ன தெரியுமா ?
இனிப்பு சாப்பிட முடியாததை பற்றி சமந்தா கூறியது:
எனக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும். சிறு வயதில் தீபாவளிக்கு ஸ்பெஷலாக அதிரசம் கிடைக்கும். என் வீட்டிற்கு முன்பு ஒரு சின்ன கடை இருந்தது. அந்த கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு அதிரசம் கிடைக்கும். அதனால் 50 பைசா, 50 பைசாவாக சேர்த்து வைத்து வாரத்தில் 4, 5 முறை அதிரசம் வாங்கி சாப்பிட்டுவிடுவேன். ஆனால் இப்போ அதை சாப்பிட முடியவில்லை. கோடிகளில் சம்பாதித்தாலும் டயட், ஹெல்த், மயோசிடீஸ் பாதிப்பு என வந்துவிட்டதால் சாப்பிட முடியாத நிலை. இவ்வாறு சமந்தா கூறினார்.
காசு, பணம் இருந்தாலும் கூட ஆசைப்பட்டதை வாங்கி சந்தோஷமாக சாப்பிட முடியாமல் இருக்கிறாரே சம்மு என சமந்தாவின் ரசிகர்களுக்கு வேதனையாக உள்ளது. நடிகையானதில் இருந்து தற்போது வரை உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கிறார் சமந்தா. சொல்லப் போனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் எடை குறைந்ததே தவிர அவர் வெயிட் போட்டதே கிடையாது. அதற்கு ஸ்வீட்டை தவிர்ப்பதும் காரணமாக இருக்கலாம் என ரசிகர்கள் அவரை பாராட்டுகின்றனர்

