அது என்ன பிரெக்னன்ஸி கிட்டா?.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சமந்தா..
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா முதல் படத்திலேயே தன்னுடன் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவுடன் காதல் வலையில் விழுந்த நிலையில், சில ஆண்டு காதலுக்குப் பிறகு அவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில், சிட்டாடல் வெப்சீரிஸ் சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள நிலையில், அடுத்து பங்காரம் படத்தில் நடிக்கப் போகிறேன் என சமந்தா அறிவித்திருந்தார். இந்தியில் மீண்டும் ஒரு வெப்சீரிஸில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், நடிகை சமந்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காரில் இருந்துக் கொண்டு கையில் ஏதோ ஒரு ஸ்லிப்பை காட்டுவது போன்ற போட்டோவை வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் அது பிரெக்னன்ஸி டெஸ்ட்டுன்னு முதலில் நினைத்து ஷாக் ஆகிவிட்டோம் சமந்தா என கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். ஆனால், சமந்தாவின் கையில் இருப்பது ஒரு பேப்பர் ஸ்லிப் என்றும் அதில், ஆகஸ்ட் 1ம் தேதி டேட் போக போறீங்க என்றும் குறிப்பிட்டுள்ளது.
அந்த காலத்தில் வெயிட் மெஷினில் உடல் எடையை பார்த்தால் அதன் பின்னாடி அதிர்ஷ்டம் தரக்கூடிய வார்த்தைகள் இடம்பெறுவதை போல ஒரு விஷயத்தை தான் நடிகை சமந்தா தற்போது காட்டியுள்ளார். அதற்குள் சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? என்றே ஷாக்கை கிளப்பிவிட்டனர் நெட்டிசன்கள். நடிகை சமந்தா டேட்டிங் செல்வதை எல்லாம் காட்டவில்லை என்றும் சிட்டாடல் ஹனி பனி வெப்சீரிஸ் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகப் போவதை தான் அவர் இப்படி அறிவித்துள்ளாரா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் அந்த ஸ்லிப்பில், Find Honey on 01/08 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.