மோனோகுரோம் போட்டோ ஷூட் நடத்திய 'சாம்' – வெளியான கியூட் பிக்ஸ்.

photo

தென்னிந்திய மொழிகளில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா, நாகசைத்தன்யா உடனான விவாகரத்திற்கு பின்னர் சமந்தாவின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இவரது நடிப்பில் தயாராகியுள்ள சகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர் விஜய் தேவரக்கொண்டவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார்.

photo

photo

 சாம், அரியவகை மயோசிடிச் நோயால் பாதிக்கப்பட்ட பின்னரும், உடைந்துவிடாமல் ஒரு ஃபீனிக்ஸ் பறவையை போல மீண்டு வந்து தனது பணிகளில் முன்பை விட அதீத ஆர்வத்துடன் பங்குகொண்டு வருகிறார். அதோடு தொடர்ந்து உடற்பயிற்சி வீடியோ , போட்டோஷூட் எடுத்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சற்று முன்பு அவர் மோனோகுரோம் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனுடன் கேப்ஷனாக 'சகுந்தலம் படம் குறித்து எல்லாவற்றையும் பேசலாம்' என கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள். சமந்தாவின் அழகை வர்ணித்து, அவரின் அடுத்த படம் வெற்றி பெற வாழ்த்துமழை பொலிந்து வருகின்றனர்.

photo

Share this story