4 டிகிரி குளிர்ந்த நீரில் 6 நிமிடம் ஐஸ் பாத் செய்த சமந்தா.

photo

தென்னிந்திய முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் கடைசியாக ‘சகுந்தலம்; படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. தொடர்ந்து தற்போது குஷி படத்தில் நடித்துள்ளார். அப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தவிர பாலிவுட்டில் சிடாடல் எனும் தொடரிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை சமந்தா நடிப்பதற்கு இடைவேளை விட்டுவிட்டு தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் நோய்காக சிகிச்சை எடுக்க உள்ளாராம். ஆனால்  அதற்கு முன்னர் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள சாம் அங்கு தனது தோழியான மேக்கப் கலைஞர் அனுஷ் சாமியுடன் எடுத்துகொண்ட புகைப்படங்ளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சமந்தா 4 டிகிரி குளிர்ந்த நீரில் 6 நிமிடம் ஐஸ்பாத் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

photo

இந்த வீடியோவை பார்த்த பலருமே அவர் சரும பிரச்சனைக்காக இப்படி செய்துள்ளார் என்றும் விரைவில் நலமடைய ஆறுதலையும் பகிந்து வருகின்றனர். சமந்தாவின் அந்த வீடியோ இதோ:


 

Share this story