டக்கராக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ‘சமந்தா’.

photo

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கும் சமந்தாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  சமந்தா நாகசைதன்யாவுடனான விவாகரத்திற்கு பிறகு சுற்றுலாபயணம், ஆன்மீகம் என அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவந்த சமந்தாவிற்கு பேரிடியாக வந்ததுதான் மயோசிடிஸ் எனும் அரியவகை தசை அலர்ஜி நோய். தொடர்ந்து 8 மாதகாலம் சிகிச்சையெடுத்து வந்த சமந்தா அதிலிருந்து கொஞ்சம் மீண்ட நிலையில் சில சகுந்தலம், யசோதா, குஷி, சிட்டாடல் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

photo

இந்த நோயிலிருந்து நிரந்தரமாக விடுபட வெளிநாடு சென்று சிகிச்சை எடுக்கபோவதாக தகவல் வந்தது. அதற்கு முன்னர் பாலி தீவுக்கு சுற்றுலா சென்றார் சாம். தற்போது ட்ரிப் முடிந்து வந்த சமந்தா கிக் ஏற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த  ரசிகர்கள். சமந்தாவை பழைய மாதிரி பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

photo

photo

Share this story