“இந்த படத்தை தான் மீண்டும் மீண்டும் பார்ப்பேன்” –மனம் திறந்த சாம்.

photo

நடிகை சமந்தா தனது வாழ்நாளில் எந்த படத்தை அடிக்கடி பார்ப்பார், ஏன் அதை அப்படி  பார்ப்பார் என்பது குறித்து மனம் திறந்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

photo

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா தனது விவாகரத்துக்கு பின்னர் ஆன்மீகம் மற்றும் தனக்காக அதிக நேரம் செலவிடுகிறார். அந்த வகையில் அடிக்கடி வெக்கேஷன் சென்று அங்கு அவர் காணும் அழகிய உலகை நமக்காகவும் படம்பிடித்து தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தான் அதிகமாக பார்க்கும் படம் ஒன்று குறித்து தற்போது பதிவிட்டுள்ளார்.

photo

அந்த பதிவில்” நான் குழந்தையாக இருக்கும் போது மகிழ்ச்சி, சோகம் அல்லது கோபமாக இருக்கும் போது ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ என்ற படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பேன், ஒரு மாய உலகிற்கு என்னை கூட்டி செல்லும் இன்னும் சொல்லப்போனால் நான் வளரும் வரை அந்த படத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன். காலம் தாழ்ந்து பார்த்தாலும் கூட புதுமையாகதான் உள்ளது. இந்த படம் எப்போது பார்த்தாலும் மீண்டும் என்னை குழந்தை பருவத்துக்கு அழைத்து சென்றுவிடும். இப்போது நேரடியாக அந்த பகுதியை பார்க்கும்போது இன்னும் யங்காக உணர்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Share this story