'நான் இன்னும் செத்து போகல' -சமந்தா மனம் திறந்து உருக்கமான பேட்டி.

photos

வாடகை தாய் கதைகளத்தை  மையமாக வைத்து  வெளியாக உள்ள ‘யசோதா’ படத்தின் புரமோஷனின் ஒரு பகுதியாக  சமந்தா பேட்டி ஒன்றில் கந்துக்கொண்டு பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

photo

சமந்தா, சிகிச்சைக்கு பிறகான அந்த பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது “நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை , எனது உடல்நிலை குறித்து பல செய்திகளை சமூகவலைதளத்தில் படித்தேன், அதை தவிர்க்க வேண்டும், நான் இன்னும் இறக்கவில்லை.” என உருக்கமாக கண் கலங்கி  பேசியுள்ளார்.

photo

தொடர்ந்து பேசிய சமந்தா, “நான் எனது இன்ஸ்டாகிராம் பதிவில்  கூறியது போல், சில நாட்கள் நல்லதாக இருக்கும், சில நாட்கள் கெட்டதாக இருக்கும். சில நாட்களில், ஒரு அடி எடுத்து வைப்பது கூட கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் இப்போது நான்  திரும்பிப் பார்க்கும்போது, இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் என ஆச்சரியப்படுகிறேன். இவ்வாறு சமந்தா பேசியுள்ளார். சமந்தாவின் இந்த பேட்டியை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Share this story