"பெண்களுக்கு தங்கள் உடல்நலம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது"-நடிகை சமந்தா
zoy (ஸாய்) சானிட்டரி பேட்கள் அறிமுக நிகழ்ச்சியில் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நடிகை சமந்தா, விளையாட்டு வீராங்கனை வித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய சமந்தா, ‘‘பெண்களுக்கு தங்கள் உடல்நலம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. தற்காலத்தில் பெண்கள் தங்களது உடல், ஹார்மோன் ஆரோக்கியம், கருவுறுதல் மனநலம், தூக்கம் மற்றும் மன அழுத்தம் போன்ற விஷயங்கள் குறித்து விழிப்புணர்வுடனும் தயக்கமின்றியும் பேசத் தொடங்கியுள்ளனர்.
முந்தைய தலைமுறையினர் மாதவிடாய் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை வெளியில் சொல்லாமல் சகித்துக் கொண்டனர். ஆனால் தற்போதைய தலைமுறை சிறந்த தீர்வுகளையும் ஆரோக்கியமான மாற்று வழிகளையும் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளது. ஸாய் என்ற இயற்கை பருத்தி மற்றும் மூலிகை அம்சங்கள் கொண்ட, ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் அற்ற மாதவிடாய் பேட் தயாரிப்பில் ஈர்க்கப்பட்டு, வெறும் விளம்பரதாரராக இல்லாமல் அதில் முதலீட்டாளராகவும் இணைந்துள்ளேன்’’ என்றார்.

