சமந்தாவின் ஆக்சன் த்ரில்லர்.. 'சிட்டாடல்' 2வது டிரைலர் ரிலீஸ்..!

samantha

சமந்தா நடித்த ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடர் நவம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருக்கின்றது. இந்த தொடரின் டிரெய்லர் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த ட்ரெய்லருக்கு பிறகு தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.


இந்நிலையில், ‘சிட்டாடல்’ வெப்தொடரின் இரண்டாவது ட்ரெய்லரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.சமந்தாவும் அவரது கணவரும் இருவரும் சீக்ரெட் ஏஜென்ட்களாக இருக்கின்றனர்; இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இருவரும் பிரிய முடிவு செய்த பிறகு, அந்த பெண் குழந்தையை காப்பாற்ற அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே கதையின் மையமாக இருக்கிறது என்று ட்ரெய்லரில் தெரிய வருகிறது.samantha


வருண் தவான், சமந்தா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இந்த தொடரில் கே. கே. மேனன், சிம்ரன் உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி பேமிலி மேன்' தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டி.கே. இந்த தொடரை இயக்கியுள்ளனர். அமேசான் ப்ரைமில் நவம்பர் 7ஆம் தேதியில் வெளியாகும் இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


 

Share this story