"என்னை தென்னிந்திய நடிகையாகவே நினைக்கிறேன்"-சமீரா ரெட்டி பேட்டி

Sameera to make a comeback to Kollywood with Anand Shankar’s directorial?

 கடந்த 2002ல் வெளியான ‘மெய்னே தில் துஜ்கோ தியா’ என்ற இந்தி படத்தில் அறிமுகமான சமீரா ரெட்டி (47), முதல் படத்திலேயே தனது நிறத்தை 2 முதல் 3 நிலைகள் வெள்ளையாக காட்டு வதற்காக உடல் முழுவதும் ஒப்பனை செய்ததாகவும், செயற்கை உள்ளாடை அணிய வைக்கப்பட்டதாகவும் வேதனையுடன் சொல்லியிருந்தார். பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஆங்கில மொழி படங்களில் நடித்து பிரபலமான அவர், திருமணத்துக்கு பிறகு தனது மகனையும், மகளையும் வளர்ப்பதற்காக நடிப்பில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார்.
சமீபத்தில் அபிஜீத் மோகன் வாரங் இயக்கத்தில் வெளியான ‘ஆக்ரி சவால்’ என்ற இந்தி படத்தில் சஞ்சய் தத்துடன் நடித்திருந்த அவர், தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் சமீரா ரெட்டி அளித்த பேட்டியில், ‘தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் அற்புதமானது. இந்தி படங்களில் நிறைய நடித்திருந்தாலும், என்னை முதலில் தென்னிந்திய நடிகையாகவே நினைக்கிறேன்.

Share this story