தந்தை-மகன் பாசத்தை பறைசாற்றும் "கொல சாமி" பாடல் - மனம் வருடும் லிரிக் வீடியோ வெளியீடு
சின்னதிரையில் இயக்குனராக அறிமுகமாகிய சமுத்திரக்கனி அதற்கடுத்து நாடோடிகள் படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து போராளி, நிமிர்ந்து நில், அப்பா, நாடோடிகள் 2 என பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகனாகவும் மற்றும் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. தற்பொழுது தெலுங்கு திரைத்துறையில் பிரபல நட்சத்திரங்களுக்கு வில்லன் கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் சமுத்திரகனியே நடித்து வருகிறார். அண்மையில் வெளியான இந்தியன் 2 படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது. இப்படத்தை தன்ராஜ் கொரனானி இயக்கியுள்ளார். படத்தின் முதல் பாடலான குல சாமி போல என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை யுகபாரதி வரிகளில் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியுள்ளார். படத்திற்கு அருண் சிலுவேரு இசையமைத்துள்ளார்.