'அப்பா' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க திட்டமிடும் சமுத்திரக்கனி!?
'அப்பா' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
சமுத்திரக்கனி இயக்கம் மற்றும் நடிப்பில் 2016-ம் ஆண்டு 'அப்பா' திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் தம்பி ராமையா, யுவ ஸ்ரீலக்ஷ்மி, கேபிரில்லா, விக்னேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். குழந்தைகளிடம் பெற்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் நம் கல்விமுறை குறித்த கேள்வியையும் மக்களிடம் எழுப்பியது.

இந்நிலையில் அப்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் மற்றும் நடிப்பில் 'வினோதய சித்தம்' என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதையடுத்து தற்போது அப்பா படத்தின் இரண்டாம் பாகத்தை சமுத்திரக்கனி உருவாக்க திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக இருப்பதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

