சமுத்திரகனி, தம்பி ராமையா இணைந்து நடித்துள்ள ‘ராஜாகிளி’... டீசர் வெளியீடு !

சமுத்திரகனி மற்றும் தம்பி ராமையா இணைந்து நடித்துள்ள ‘ராஜாகிளி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் தம்பி ராமையா. தற்போது அவர் ‘ராஜாகிளி’ என்ற புதிய படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததோடு இல்லாமல் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் எழுதியுள்ளார். இந்த படத்தை தம்பி ராமையாவின் மகன் உமாபதி தான் இயக்குகிறார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தினேஷ் இசையமைத்து வருகிறார். தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வித்தியாசமான டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
இந்த படத்தில் சமுத்திரகனியுடன் இணைந்து தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவீன், இயக்குனர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், ‘கும்கி’ தரணி, தீபா, பாடகர் கிரிஷ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.