நாளை வெளியாகும் ‘ராஜாகிளி’ டீசர்.. சமுத்திரகனி படத்தின் அசத்தலான போஸ்டர் !

rajakili

 சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜாகிளி’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் பல மொழிகளில் நடித்து வருபவர் சமுத்திரகனி. அந்த வகையில் தமிழில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்கத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார். தனது மகன் படத்திற்காக கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் தம்பி ராமையா எழுதியுள்ளார்.

rajakili

இந்த படத்தில் சமுத்திரகனியுடன் இணைந்து தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவீன், இயக்குனர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், ‘கும்கி’ தரணி, தீபா, பாடகர் கிரிஷ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

rajakili

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தினேஷ் இசையமைத்து வருகிறார். தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் டீசருக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

Share this story