சமுத்திரக்கனி நடித்துள்ள திரு.மாணிக்கம்... முதல் தோற்றம் வெளியீடு
1695283248950

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியிருக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் திரு.மாணிக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனன்யா இத்திரைப்படத்தின் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். படத்தில் பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.