‘பருத்திவீரன்’ விவகாரம்: இயக்குநர் அமீருக்கு ஆதரவாக இயக்குநர் சமுத்திரகனி.

photo

பருத்திவீரன் பட சர்ச்சை தொடர்பாக இயக்குநர் அமீருக்கு பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது இயக்குநர் சமுத்திரகனியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

photo

கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’ பட இசைவெளியீட்டு விழாவுக்கு அவரை இயக்கிய அனைத்து இயக்குநர்களுக்கும் அழைக்கு விடுக்கப்பட்டது ஆனால் கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் பட இயக்குநர் அமீர் அதில் கலந்துகொள்ளவில்லை. இது குறித்த கேள்வி எழுந்த நிலையில் கார்த்தி-அமீர் இருவருக்கும் இடையில் உள்ள மனகசப்பு காரணமாக அவர் கலந்துகொள்ள்வில்லை என பேச்சு அடிபட்டது.

photo

தொடர்ந்து அமீரிடம் இது குறித்து கேட்கப்பட்டது, தமக்கு முறையான அழைப்பு வரவில்லை அதனால் தான் கலந்துகொள்ள வில்லை என பதில் கொடுத்திருந்தார். தொடர்ந்து இந்த விவகாரம் பெரிதாக படத்தின் தயாரிப்பாளர் ஞான்வேல்ராஜா குறித்தும் இந்த படத்திற்காக வழக்கு நடப்பதாகவும் அமீர் தெரிவித்திருந்தார். அடுத்தடுத்து படத்திற்கு அமீர் கடன் வாங்கிய விவகாரம் பூதாகரமாக அமீர் மீது குற்றசாட்டுகள் பதிவாக தொடங்கியது. இந்த நிலையில் அமீருக்கு ஆதரவாக பலர் கரங்களை நீட்டினார்கள். அந்த வகையில் தற்போது இயக்குநர் சமுத்திரகனி அமீருக்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கார்த்தி  மௌனமாக இருப்பது குறித்தும் அமீர் படத்துக்காக எவ்வளவு உழைத்துள்ளார் என்பது குறித்தும் பதிவிட்டுள்ளார்.

Share this story