சமுத்திரக்கனி- தம்பி ராமையா கூட்டணியில் உருவான ‘ராஜா கிளி’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
சமுத்திரக்கனி, தம்பி ராமையாவின் ராஜா கிளி படத்தில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் பல படங்களில் ஹீரோவாகவும் குணச்சத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் திரு. மாணிக்கம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் சமுத்திரக்கனி. இதற்கிடையில் இவர், தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கியிருக்கும் ராஜா கிளி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதாவது சாட்டை, அப்பா, விநோதய சித்தம் போன்ற படங்களுக்கு பிறகு சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா கூட்டணி மீண்டும் ராஜா கிளி திரைப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்தது ராஜா கிளி திரைப்படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க தம்பி ராமையா படத்திற்கு கதை, வசனம் எழுதி இருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கேதார்நாத் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படத்தின் டீசரும் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அடுத்தது இந்த படம் 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இப்படம் வருகின்றன நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு புதிய ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.