சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் 'பைலா'

samuthirakani

தெலுங்கு படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வரும் சமுத்திரகனி, தமிழில் கதையின் நாயகனாகவே நடிக்க விரும்புகிறார். கடைசியாக 'ராமம் ராகவம்' படத்தில் நடித்தார். இது தமிழ், தெலுங்கில் வெளியானது.

samuthirakani

இந்த நிலையில் தற்போது பைலா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் ரம்யா நம்பீசன், ராஜ்குமார், இலங்கையை சேர்ந்த நடிகை மிச்சலா, யோகிபாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, ஆண்ட்ரூ, என்.இளங்கோ ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை கே.வீரக்குமார் இயக்குகிறார். கலா தியேட்டர்ஸ் சார்பில் ராசய்யா கண்ணன் தயாரிக்கிறார். சனுகா இசைஅமைக்க, ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

Share this story

News Hub