சமுத்திரக்கனி நடிக்கும் ராமம் ராகவம் முதல்தோற்றம் ரிலீஸ்

சமுத்திரக்கனி நடிக்கும் ராமம் ராகவம் முதல்தோற்றம் ரிலீஸ்

தன்ராஜ் கொரனானி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அப்பா மகன் என்ற உணர்வுபூர்வமான கதையில் உருவாகும் இத்திரைப்படம், இதுவரை யாரும் சொல்லப்படாத தனித்துவமான கதையைக் கொண்டு உருவாகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, தன்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தன்ராஜ் மற்றும் சமுத்திரக்கனி அப்பா, மகனாக நடிக்க, மோக்‌ஷா, ஹரிஸ் உத்தமன், பிரித்வி, அஜய் கோஷே, லாவண்யா, ராக்கெட் ராகவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகிறது. படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. டியர் காம்ரேட் பட இயக்குநர் பரத் மற்றும் இயக்குநர் சுப்பு ஆகியோர் படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர். ஐதராபாத்,  சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

சமுத்திரக்கனி நடிக்கும் ராமம் ராகவம் முதல்தோற்றம் ரிலீஸ்

இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. 

Share this story