சமுத்திரக்கனியின் யாவரும் வல்லவரே பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

சமுத்திரக்கனியின் யாவரும் வல்லவரே பட வெளியீட்டு தேதி அறிவிப்பு 

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து வரும் இவர், கைவசம் இருந்த ஆர்.ஆர்.ஆர், டான், ரைட்டர், அந்தகன், யாவரும் வல்லவரே உள்ளிட்ட படங்களை நடித்து முடித்துள்ளார். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே இறுதிக்கட்ட பணிகள் முடிக்கப்பட்ட திரைப்படம் 'யாவரும் வல்லவரே'.  இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, ரித்விகா, நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். என்.ஆர்.ஜெய் நந்தன் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜெய்ஸ் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.  4  வெவ்வேறு கதைகளை ஒரே புள்ளியில் இணைத்து சொல்லும் கதைக்களத்தை கொண்டுள்ள இப்படத்தை  ஆனந்த் ஜோசப் ராஜ் என்பவர் தயாரித்துள்ளார்.

சமுத்திரக்கனியின் யாவரும் வல்லவரே பட வெளியீட்டு தேதி அறிவிப்பு 

இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படம் வரும் டிசம்பர் 29-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Share this story