நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சமுத்திரகனியின் ‘சித்திரை செவ்வானம்’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு !
சமுத்திர நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சித்திரை செவ்வானம்’. பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியுள்ளார். அதோடு இந்த படத்தின் கதையை இயக்குனர் விஜய் எழுதியுள்ளார். இந்த படத்தில் சமுத்திரகனியுடன் இணைந்து பிரபல நடிகை சாய் பல்லவி தங்கை பூஜா கண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் ரீமா கல்லிங்கல், இயக்குனர் சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அப்பா - மகள் பாசப் பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. முழுக்க முழுக்க இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த இப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இந்நிலையில் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் டிசம்பர் 3-ஆம் தேதி ஜி5 ஓடிடித்தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

