கவனம் பெறும் ‘உருட்டு உருட்டு’ பாடல்... ‘பப்ளிக்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

public

 சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள ‘பப்ளிக்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குனரான சமுத்திரகனி சமீபகாலமாக சமூக சிந்தனையில் உருவாகி வரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பப்ளிக்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ர.பரமன் இயக்கி வருகிறார். 

இந்த படத்தில் சமுத்திரகனியுடன் இணைந்து நடிகர் காளி வெங்கட் மற்றும் ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ராஜேஷ் யாதவ் மற்றும் வெற்றி இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.கே.ஆர்.சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.கே.ரமேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். 

அரசியல் கட்சியில் பணியாற்றும் தொண்டர்கள் பற்றிய படமாக இப்படத்தின் கதைக்களம் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ‘உருட்டு உருட்டு’ என தொடங்கும் இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


 

Share this story