மாறுப்பட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள 'விமானம்'.. சமுத்திரகனி பட டீசர் வெளியீடு !

vimanam

சமுத்திரக்கனியின் 'விமானம்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குனராக சமுத்திரக்கனி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாறுப்பட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள 'விமானம்' படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன்  அனுசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 vimanam

இந்த படத்தை இயக்குனர் சிவபிரகாஷ் என்னலா என்பவர் இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தை கே.கே.கிரியேட்டிவ் வெர்க்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். சரண் அர்ஜூன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.   

vimanam

இந்த படத்தில் சமுத்திரகனி மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விமானத்தை வைத்து இப்படம் உருவாகியுள்ளது. அதாவது சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் இப்படத்தில் பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story