ஸ்மார்ட் லுக்கில் சஞ்சிதா ஷெட்டி.. வைரல் புகைப்படங்கள் !
நடிகை சஞ்சிதா ஷெட்டி ஸ்மார்ட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கன்னட நடிகையான சஞ்சிதா ஷெட்டி, ‘அழுக்கன் அழகனாகிறான்’ என்ற தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ‘சூது கவ்வும்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். பின்னர் என்னோடு விளையாடு, ரம், என்கிட்டே மோததே, ஜானி உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இதையடுத்து தற்போது பார்ட்டி, தேவதாஸ் பிரதர்ஸ் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். தமிழை தவிர தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களிலும் சஞ்சிதா நடித்து வருகிறார். சஞ்சிதாவின் திரைப்படங்களுக்கு தமிழை விட தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனாலும் தமிழில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வரும் அவர், அதற்காக தொடர்ந்து போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். கவர்ச்சி தூக்கலாக வெளியாகும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்நிலையில் கவர்ச்சியுடன் ஸ்மார்ட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை சஞ்சிதா ஷெட்டி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே தனி கவனம் பெற்றுள்ளது.

