அசத்தலான லுக்கில் சஞ்சிதா ஷெட்டி... வைரல் புகைப்படங்கள் !
அசத்தலான லுக்கில் நடிகை சஞ்சிதா ஷெட்டி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
கன்னட நடிகையான சஞ்சிதா ஷெட்டி, தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். ‘அழுக்கன் அழகனாகிறான்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், பில்லா 2, சூது கவ்வும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் சூது கவ்வும் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
அதன்பிறகு என்னோடு விளையாடு, ரம், என்கிட்டே மோததே, ஜானி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. பின்னர் அவர் நடித்துள்ள பார்ட்டி, தேவதாஸ் பிரதர்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
தற்போது தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சஞ்சிதா ஷெட்டி, ப்ரஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.