சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் படம் -என்ன டைட்டில் தெரியுமா ?
சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் இயக்கப் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர் முன்னிலையில் வெளியிட்டார். கே.ஆர்.ஜி. கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி, தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சாந்தனு பாக்யராஜுடன் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா–மகன் உறவை மையமாகக் கொண்ட குடும்ப உணர்வுகள், ஆக்ஷன் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட விறுவிறுப்பான கதையாக உருவாகிறது.
வெளியான இயக்கப் போஸ்டரில் சாந்தனு, சீமான் தோற்றங்களுடன் மதுரை கோயில் கோபுரங்கள் இடம்பெற்றிருப்பது படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குடும்ப உணர்வுகளையும் விறுவிறுப்பான திரைக்கதையையும் இணைத்து படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற சுசீந்திரன், இந்தப் படத்தையும் அதே பாணியில் உருவாக்குகிறார். கே.ஆர்.ஜி. கண்ணன் ரவி குழுமத்தின் 10-வது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

