சங்கமித்ராவை மீண்டும் கையிலெடுத்த சுந்தர் சி... ஜெயம் ரவிக்கு பதில் இவர்தான் ?

sangamithra

சங்கமித்ராவில் ஜெயம் ரவிக்கு பதிலளித்த விஷால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

'பொன்னியின் செல்வன்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் வரலாற்று பின்னணி கொண்டு உருவாகும் படங்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தனது கனவு படமான 'சங்கமித்ரா' படத்தை மீண்டும் சுந்தர் சி கைலெடுத்துள்ளார்.  பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் என கடந்த மூன்று ஆண்டு முன்பு அறிவிக்கப்பட்டிருந்து.

sangamithra

ஆனால் சில சிக்கல்களால் இன்றுவரை படத்தின் பணிகள் தொடங்காமல் இருந்து வந்தது. தற்போது இப்படத்தின் பணிகளை மீண்டும் சுந்தர் சி தொடங்கியுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சரித்திர பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வந்தது. நிதி சிக்கலால் கைவிடப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

sangamithra

ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து நடிகர் ஜெயம் ரவி விலகினார். இந்நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலாக நடிகர் விஷால் இப்படத்தில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சங்கமித்ரா படத்திலிருந்து வெளியாகும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

Share this story