‘ரெடின் கிங்ஸ்லி’ பிறந்தநாள் – எமோஷனல் பதிவை போட்ட அவரது மனைவி.
1703254651916

புது மாப்பிள்ளையாக சும்மா ஜம்முன்னு வலம்வரும் ரெடின் கிங்ஸ்லி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது காதல் மனைவி சங்கீதா அழகான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கடந்த 10ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட ரெடின் கிங்ஸ்லி- சீரியல் நடிகை சங்கீதா ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் புது மாப்பிள்ளையாக பிறந்தநாள் காணும் ரெடினுக்கு அவரது மனைவி திருமண வாழ்த்து கூறியுள்ளார்.
அதில், “ என் சரிபாதியே பிறந்தநாள் வாழ்த்துகள். கணவராக நீங்கள் கொடுக்கும் அன்பும் பாசத்தையும் என்னால் எப்போதும் மறக்க முடியாது. இது போல இன்னும் பல பிறந்தநாளை கொண்டாட வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.