கதாநாயகனாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகன் -யார் தெரியுமா ?
இயக்குனர் ஷங்கர் தமிழில் ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் .அதை தொடர்ந்து காதலன் ,இந்தியன் ,அந்நியன் ,ஜீன்ஸ் ,எந்திரன் போன்ற வெற்றி படங்களை இயக்கினார் .இதற்கிடையே இம்சை அரசன், காதல் போன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார் .இப்போது இவரின் மகன் அர்ஜித்துக்கு ஹீரோவாகும் ஆசை வந்து விட்டது .இதனால் அவர் எந்த படத்தில் அறிமுகமாகிறார் ,யார் இயக்குனர் என்பது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
முன்னணி இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் விரைவில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகவுள்ளார். ஷங்கரின் அர்ஜித் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார், அவரது முதல் படத்தை அட்லீயின் உதவியாளராக இருந்தவர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

