வசூலில் பட்டையை கிளப்பும் 'சங்கராந்திகி வஸ்துன்னம்'

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ள 'சங்கராந்திகி வஸ்துன்னம்' படம் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், தற்போது நடித்துள்ள படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்’. அனில் ரவிபுடி இயக்கி இருக்கும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ், உபேந்திரா லிமாயி, சாய்குமார், நரேஷ், வி.டி.வி கணேஷ் மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசராலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பீம்ஸ் சிசிரோலியோ இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி 14ம் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த நிலையில், வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் 15 நாட்களில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது.
𝗕𝗟𝗢𝗖𝗞𝗕𝗨𝗦𝗧𝗘𝗥 𝟭𝟱 𝗗𝗔𝗬𝗦 at cinemas for #BlockbusterSankranthikiVasthunam ❤️🔥❤️🔥❤️🔥
— Sri Venkateswara Creations (@SVC_official) January 29, 2025
With all the audiences unanimous love #SankranthikiVasthunam is speeding towards 300CR gross worldwide 💥💥
— https://t.co/ocLq3HYfE9
Victory @VenkyMama @anilravipudi @aishu_dil… pic.twitter.com/HCK0hawB2T
இப்படத்தின் டிக்கெட் விற்பனை அமோகமாக விற்பனையாகி இருப்பதால், விரைவில் ரூ.500 கோடி மைல்கல்லை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம், அடுத்த மாதம் ஓ.டி.டி.யில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் ஓ.டி.டி உரிமையை ஜி 5 நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மேலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.