சண்முக பாண்டியன் நடிக்கும் வாண வேடிக்கை -வில்லன் யார் தெரியுமா ?
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிப்பில் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன், ஷிவானி ராஜசேகர் முதன்மை வேடத்தில் நடிக்கும் படம் ‘வாணவேடிக்கை’. நடிகர் ரவி மோகனின் அண்ணனும், இயக்குனருமான மோகன் ராஜா இப்படத்தில் வில்லனாக களம் இறங்குகிறார். படத்தின் டிரெய்லரை நடிகர்கள் ஆர்யா மற்றும் ரவி மோகன் வெளியிட்டனர். சாம் சி.எஸ் இப்படத்துக்கு இசை அமைக்கிறார். மேலும், ‘பருத்திவீரன்’ சரவணன், இந்துமதி, ஜெயப்பிரகாஷ், இயக்குனர் தமிழ், சித்ரா லக்ஷ்மன், கிரண், அம்மா கிரியேஷன்ஸ் சிவா உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
டிரெய்லரில் சண்முக பாண்டியனின் தோற்றம் இதுவரை அவர் செய்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. குறிப்பாக சண்டை காட்சிகளில் அவரது தந்தை விஜயகாந்தை நினைவுபடுத்துகிறார். ‘தனி ஒருவன்’ படத்தில் வரும் அரவிந்த்சாமி வேடத்துக்கு இணையாக இப்படத்தில் மோகன் ராஜாவின் கேரக்டர் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

