'மெளனகுரு' இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ள அர்ஜூன் தாஸ்... பூஜையுடன் தொடங்கிய புதிய படம் !

arjun dass

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வருகிறார் அர்ஜூன் தாஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கைதி' படத்தில் வில்லனாக நடித்து பிரபல நடிகராக மாறினார். இந்த படத்திற்கு பிறகு விஜய்யின் 'மாஸ்டர்' படத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார். 

arjun dass

அர்ஜூன் தாஸ் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, தற்போது ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அந்த வகையில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் 'அநீதி' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். 

arjun dass

இந்த படத்தில் ஜி எம் சுந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சாந்தகுமார் இயக்கவுள்ளார். 'மெளனகுரு' படத்தின் மூலம் பிரபலமானவர் சாந்தகுமார். இந்த படத்திற்கு பிறகு ஆர்யாவை வைத்து 'மகாமுனி' படத்தை இயக்கினார். இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று விருதுகளை குவித்தது. தற்போது சில ஆண்டுகள் கழித்து அர்ஜூன் தாசை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. 

Share this story