சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’... சென்சார் குறித்து முக்கிய தகவல் !

AgentKannayiram
 சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. 

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். இவர்களுடன் ஊர்வசி, முனீஷ்காந்த், புகழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

AgentKannayiram

தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது தமிழில் ரீமேக்காகியுள்ளது. இந்த படத்தை ‘வஞ்சகர்’ உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியுள்ளார். வரும் நவம்பர் 25-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

லாப்ரின்த் பிலிம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்திற்கு யுஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது. 

Share this story